
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள தாய் முடி முதல் பிரிவு தேயிலை தொழிற்சாலை அருகாமையில் உள்ள தோட்டத்து குடியிருப்புக்குள் புகுந்த யானை கூட்டம் பொதுமக்கள் இருக்கும் இடத்தில் சேதப்படுத்தியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் காற்றுடன் கூடிய மழை வருவதினால் அப்பகுதியில் தொழிலாளர்கள் வீட்டின் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருந்தனர். அப்பொழுது தாயுடன் குட்டியும் கூடிய யானை கூட்டம் குடியிருப்பு பகுதியில் புகுந்து சேதப்படுத்தியது. சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வனவிலங்கு அதிகாரிகளை வரவழைத்து யானையை இரவில் காட்டுக்குள் விரட்டிவிட்டனர்.
அப்பகுதியில் குடியிருப்புக்குள் யானை புகுந்ததால் மக்கள் இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனவிலங்கு அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
இப்பகுதியில் அதிக அளவு வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது என்பதால் வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.











