
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள முடிஸ் பகுதியில் பலா மரங்களில் பலாப்பழம் சாப்பிடுவதற்காக வந்துள்ள காட்டு யானை கூட்டம் குடியிருப்பு பகுதிகளில் வருவதால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறையினர் யானைக் கூட்டங்களை அங்கிருந்து மெதுவாக காட்டுக்குள் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் யானைக் கூட்டங்கள் வருவதால் தொழிலாளிகள் மற்றும் குழந்தைகள் முதியவர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
இதனால் குடியிருப்பு பகுதிகளை வனத்துறையினர் அவ்வப்போது கண்காணிப்பில் எடுத்துக்கொண்டு பொதுமக்களை காக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
நிருபர்
-எம் செந்தில் குமார்.












