
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகரில் கடந்த 25 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிக்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆறு ஏழு மாதங்களாக இந்த நடைமுறை இல்லை. 20, 25 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இது குறித்து தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்துவதாக கூறினார்கள்.
இது குறித்து மேலும் பொதுமக்கள் சிலரிடம் விசாரித்த பொழுது வெள்ளலூர் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் இது நாள் வரை முறையாக 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. ஆனால் பன்னிரண்டாவது வார்டு கிருஷ்ணா நகர் பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது என வருத்தம் தெரிவித்தார்கள். அதற்கு காரணமாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் அதிகார போதையே என ஒரு தரப்பும், மற்றொரு தரப்பு குடிநீர் வினியோகம் மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்து மக்களுக்கும் பிரித்து விநியோகித்து வருவதால் இந்த தாமதம் ஏற்படுகிறது என்றும் வெள்ளலூர் பஞ்சாயத்தில் வினியோகிக்கும் குடிநீர் அந்த பஞ்சாயத்தில் குடியிருக்கும் தங்களுக்கு மட்டுமே வேண்டும் என சிலரும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ளலூர் பஞ்சாயத்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது கடந்த சில நாட்களாக தண்ணீர் அழுத்தம் குறைவாக இருப்பதால் விநியோகம் தடைபட்டு உள்ளதாகவும் அது விரைவில் சரி செய்யப்பட்டு சில மணி நேரங்களில் தண்ணீர் திறந்து விடுவதாக உறுதி அளித்து சென்றுள்ளார்கள்.
தண்ணீர் சம்பந்தப்பட்ட பொறியாளர் மக்களை சந்தித்து இரண்டு நாட்களுக்குள் சரி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக சரி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களை போத்தனூர் காவல்துறை ஆய்வாளர் அசோக் குமார்,துணை ஆய்வாளர் மாடசாமி மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று பொதுமக்களிடையே சுமுக பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் உடனடியாக கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.












