
திருவைகுண்டம் நிலைய எல்லைக்குட் பட்ட முல்லன் விளை என்ற ஊரில் கிணற்றில் அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் கிடப்பதாகவும், அதனை எடுத்து தருமாறும் தூத்துக்குடி சிப்காட் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் தீயணைப்பு ஊர்தியுடன் ஸ்தலத்திற்கு சென்று பார்த்ததில், 60 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் இறந்து பல நாட்களுக்கு மேலாகியும் மிகவும் அழுகிய நிலையிலும் தலை, கை, கால் ஏதுமில்லாமல் பாதி உடல் மட்டுமே சடலமாக கிடந்தது.
தீயணைப்பு வீரர்கள் கட்டைகளால் பாடை கட்டி கயிறுகள் மூலம் இறக்கி பல மணி நேரம் போராடி லாவகமாக சடலத்தை எடுத்து சாயர்புரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அருகில் திருவைகுண்டம் தீயணைப்பு நிலையம் இருக்கும் போது பெரிய தொழிற்சாலைகள் நிறைந்த சென்சிட்டிவ் பகுதியான சிப்காட் தீயணைப்பு நிலைய ஊர்தி வரவழைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












