
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம்,கயத்தாறு அருகே உள்ள ஆசூர் நாகம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவில் 24 ம் ஆண்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சீரும் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொது மக்களின் அழைப்பினை ஏற்று சிறப்பு விருந்தினராக திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். ஊர் சார்பாக அவருக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியினை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நாகம்பட்டி ஊர் நாட்டாமைகள் மற்றும் கோவில் தர்மஸ்தாகள் பூவேந்திரபாண்டியன்,நட்டார்,சங்கரபாண்டியன்,பொயாளிமுத்து,மருதையா,ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பக்த கோடிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.












