ஆடி மாதக் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது!!

கோவில்பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதக் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில் உள்ள பசும்பொன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத கொடை விழா கடந்த 31ஆம் தேதி அன்று நாட்டுக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாரணைகள் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி இரவு சாமக்கொடை நடைபெற்றது.சனிக்கிழமை முளைப்பாரி ஊர்வலம் முக்கிய வீதியில் வந்து பின்னர் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா ஏற்பாட்டினை விழா கமிட்டியாளர் மற்றும் இளைஞரணி சார்பில் செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts