
பீடி இலை மூட்டைகள் கைப்பற்றியது தூத்துக்குடி நகர் பகுதி தெற்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட லயன்ஸ்டவுனிலிருந்து ஊரணி ஒத்த வீடு செல்லும் சாலையில் உள்ள உப்பளத்து ஓடைபாலத்தில்(மச்சாது பாலம்) இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு ரகசிய தகவல் .மேற்படி இன்ஸ்பெக்டர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ் ராமசந்திரன் தலைமை காவலர்கள் பாலகிருஷ்ணன்,

இருதயராஜ் குமார் இசக்கி முத்து மற்றும் காவலர்கள் பழனி பாலமுருகன் காபிரியேல் பேச்சி ராஜா ஆகியோர் ரோந்து அலுவல் செய்த போது இன்று 19.08.2025 TN 72 Y 4501 என்ற பதிவு எண் கொண்ட. TATA 407 கண்டைனர் வண்டியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 35 கிலோ எடை கொண்ட 43 மூட்டை பீடி இலை, கட்டிங் பீடி இலை, பீடி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.


சுமார்(1500கிலோ) கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு பைபர் படகுகளும் ( Yamaha 9*9 Hp Engine) கைப்பற்ற பட்டது.மேலும் வாகனத்தை ஓட்டி வந்த 1.அருண்குமார், 2.இர்சாத் கான் ஆகியோர் பிடிபட்டுள்ளனர். மேற்படி கைப்பற்ற பட்ட பீடி இலைகள் பைபர் படகுகள் மற்றும் எதிரிகள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்க பட உள்ளனர் கைப்பற்ற பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் 50 இலட்சம் ஆகும்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக செய்தியாளர்
–பரணிபாலா.












