உலக சமாதானத்தை வலியுறுத்தி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம்!

உலக சமாதானத்தை வலியுறுத்தி கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து உலகம் சமாதானம் வேண்டியும், மழைவளம் வேண்டியும் ,விவசாயம் வளம்பெறவும், வைரஸ்தொற்று நோய் நோய் நீங்கி, அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் அன்னையிடம் வேண்டி மாபெரும் 1008 கஞ்சிக்கலயம், 26 அக்கினிசட்டி, 56 முளைப்பாலிகை ஏந்தி ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் ஆன்மிக ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.

ஊர்வலம் மந்தித்தோப்பு ரோடு, மாதாங்கோவில் தெரு, தெற்கு பஜார், செண்பகவல்லி அம்மன் கோவில் வழியாக மன்றம் வந்தடைந்தது. பக்தர்கள் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதனையடுத்து அன்னதானம் வழங்கபட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts