ஒரே நாளில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 நபர்கள் அதிரடியாக கைது*

தூத்துக்குடி மாவட்டம் : 26.08.2025

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினரின் Operation மாற்றப்பாதை நேற்று இரவு ஒரே நாளில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 13 எதிரிகள் அதிரடியாக கைது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.காப. அவர்களின் உத்தரவின் படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்களது மேற்பார்வையில் நேற்று (25.08.2025) இரவு தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 சோதனை சாவடிகள் அமைத்தும், 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் (ஆயுதப்படை காவலர்கள்) கொண்ட 8 சிறப்பு குழு அமைத்தும், மொத்தம் 91 காவல் துறையினர் தீவிர வாகன சோதனை, ரோந்து மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவரும் நபர்களை தணிக்கை செய்தும் Operation மாற்றப்பாதை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேற்கண்டவாறு நடைபெற்ற Operation-ல் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவரும் சுமார் 32 நபர்களை தணிக்கை செய்தும், மேலும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 7 நபர்கள் மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 எதிரிகள் என மொத்தம் 13 நபர்களை நேற்று இரவு ஒரே நாளில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து, அவர்களிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சா, 4 அரிவாள்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாகன தணிக்கையில், வாகனத்திற்கான உரிய ஆவணம் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குகள் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றி திரிபவர்கள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபட்டு பொதுமக்களுக்கு தொல்லை மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் மாவட்ட காவல் அலுவலக எண் 0461 2340700, 9498101830 மற்றும் ஹலோ போலீஸ் எண் 95141 44100 ஆகியவற்றிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளத

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts