
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு மகிழ் முற்றம் நெய்தல் நிலத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சிந்திய அனைவரையும் வரவேற்றார். மகிழ்முற்றும் ஒருங்கிணைப்பாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலகப் புகைப்பட தினம் குறித்து பேசும்போது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. லூயிஸ் டகுரே என்பவர் வளர்த்த புகைப்பட கலை கண்டுபிடித்ததை நினைவுகூறும் வகையில் உலக புகைப்பட தினம் 1837ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. புகைப்பட வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் புகைப்பட கலை மற்றும் அறிவியலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. டகுரியோ வகை புகைப்பட செயல்முறை என்பது நிரந்தரமான புகைப்படங்களை படம் பிடிக்கும் ஆரம்ப கால முறை. இது ஒளி உணர் பரப்புகளை படம் பிடிக்கிறது.
உலக புகைப்பட தினம், புகைப்படம் எடுப்பதை கலை என்றும், புகைப்பட கலைஞர்கள் பல்வேறு தொழில்நுட்பங்கள், ஸ்டைல் மற்றும் கம்போசிசன் ஆகியவைளை பயன்படுத்தி, பல அழகான காட்சிகளை படம்பிடிக்க வலியுறுத்துகிறது. அழகான கதைகள் சொல்வதிலும், நினைவுகளை பாதுகாத்து வைத்துக்கொள்வதிலும், புகைப்படகலையின் சக்தியை காண்பிக்க ஊக்குவிப்பதே இந்நாளின் முக்கியத்துவம். புகைப்பட கலையில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து பேசுவது, தொழில்நுட்ப கருவிகளின் வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் குறித்த வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்வது, புகைப்பட கலைஞர்கள் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள் மற்றும் கதை படங்கள் ஆகியவற்றின் பின்னால் உள்ள கதைகள் குறித்து பேசுவது, அவர்களின் கிரியேட்டிவ் செயல்துறை குறித்து பேசுவது இந்த நாளில் முக்கியத்துவம் பெறுகிறது.
உலக புகைப்பட தினத்தில் அனைத்து வகையான புகைப்படக் கலைகளின் உலகளாவிய கொண்டாட்டமாகும், ஆனால் ஒவ்வொரு ஆண்டும், நாம் கவனம் செலுத்த ஒரு விருப்பமான கருப்பொருளையும் கொண்டுள்ளோம். உலக புகைப்பட தினம் 2025 இன் கருப்பொருள் “எனது விருப்பமான புகைப்படம் என்பதாகும். புகைப்பட வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் அனைவரும் மரக்கன்று நட்டு புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.












