காரில் 10 கிலோ கஞ்சா கடத்தல் 3பேர் கைது!! 10 கிலோ கஞ்சா, 2 கார்கள் பறிமுதல்!!

கோவில்பட்டியில் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்த 3பேரை போலீசார் கைது செய்தனர். 10 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் இன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு கார்களை சோதனை செய்ததில் கோவில்பட்டி சாஸ்திரிநகரைச் சேர்ந்த ராமையா மகன் சங்கிலிபாண்டி (39), தூத்துக்குடி P & T காலனியை சேர்ந்த மாடசாமி மகன் மகாராஜா (31), கோவில்பட்டி கணேஷ் நகரை சேர்ந்த நடராஜ் மகன் நாகராஜ் (23) ஆகியோர் என்பதும் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக மேற்படி போலீசார் சங்கிலிபாண்டி மகாராஜா மற்றும் நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவில்பட்டி செய்தியாளர்,
-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts