குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரியை துரத்தி பிடித்து கைது செய்த போக்குவரத்துப்பிரிவு காவலர்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரியை துரத்தி பிடித்து கைது செய்த போக்குவரத்துப்பிரிவு காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த 18.08.2025 அன்று இரவு தூத்துக்குடி மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. ஞானமுத்து அவர்கள் குரூஸ்ர்னாந்த் சிலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய எதிரியை விசாரணை மேற்கொண்டபோது அவர் தப்பிச் சென்றுள்ளார். துரிதமாக செயல்பட்ட மேற்படி தலைமை காவலர் எதிரியை துரத்தி பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து சிறப்பாக பணிபுரிந்தார்.

மேற்படி மெச்சத்தகுந்த பணிபுரிந்த தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் நேற்று (19.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts