கைப்பந்தாட்ட அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட கைப்பந்தாட்ட (25.08.2025) அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முன்பாக உள்ள மைதானத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. சிவக்குமார் ஆகியோரின் முன்னெடுப்பின் படி காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் புதிய கைப்பந்தாட்ட (Vollyball) அரங்கத்தை உருவாக்கினர்.*

*மேற்படி உருவாக்கப்ட்ட கைப்பந்து விளையாட்டு அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (25.08.2025) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் விளையாட்டு அரங்கத்தை உருவாக்க உதவிய மேற்படி காவல்துறை அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி விளையாட்டு அரங்கத்தை தொடர்ந்து சிறப்பாக பாராமரிக்குமாறு காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.*

*இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் ஊ. மதன் இ.கா.ப, வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.*

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts