சாலை அமைக்க வலியுறுத்தி கோவில்பட்டி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – போக்குவரத்து பாதிப்பு!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டியில் பிள்ளையார் கோவில் தெரு, மேற்கு தெரு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி, வாறுகால் வசதி, மின்விளக்கு வசதி என அடிப்படை வசதிகள் இல்லை என்றும், இதுவரை பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,விரைந்து சாலை வசதி, வாறுகால் வசதி செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோவில்பட்டி – கடலையூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தினால் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் கிடைத்ததும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வருவாய் துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட சாலையில் சிலர் பட்டா இடம் வருவதாகவும், அதை சாலை அமைக்க தொடர்பாக கருத்துருமாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ளதாகவும், அதன் பின்னர் சாலை அமைக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts