தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை!!

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண் 60 மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் அ. ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வினை வெளியிட்டுள்ளது .

அதில் மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணாக 82 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது தேர்ச்சி மதிப்பெண் 82 விருந்து 60 மதிப்பெண்ணாக குறைத்து நிர்ணயம் செய்து ஆணை வெளியிட வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்
கழக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்து மாற்றுத்திறனாளி மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த கால கழக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் துறை என்ற தனி துறையை உருவாக்கி தன்னுடைய நேரடி பார்வையில் வைத்திருந்தார். அதுபோல முதல்வர் அவர்களும் தற்போது மாற்றுத்திறனாளிகள் துறையை தன்னுடைய நேரடி பார்வையில் வைத்துள்ளார் .
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை இரு மடங்கு உயர்வு, ஆய்வுப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகை, அரசு பேருந்தில் 75 சதவீதம் கட்டண விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு என்பதை மாற்றுத்திறனாளிகள் நன்றியோடு நினைத்துப் பார்த்தது பெருமைப்படுகிறோம்.
தற்போது பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தி மாபெரும் சமூக நீதியை திராவிட மாடல் அரசு நிலைக்காட்டியுள்ளது.

ஆசிரியர் பணி நியமனத்திற்கு தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு என்று ஒரு தேர்வும், அதற்கு அடுத்தபடியாக பணி நியமனம் பெறுவதற்கு நியமன தேர்வும் எழுத வேண்டிய சூழ்நிலை இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் இரண்டு தேர்வுகளை எழுதுவது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

தற்போது அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உள்ளது போல மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் 82 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் தேர்வினை மிகுந்த சிரமத்துடன் எழுதி வருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தகுதி மதிப்பெண் 82 மதிப்பெண்களுக்கு பதிலாக 60 மதிப்பெண் என நிர்ணயம் செய்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் பணி பெறுவதற்கான வாய்ப்பினை வழங்கி மாற்றுத்திறனாளி வாழ்வில் ஒளி ஏற்றுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts