தூத்துக்குடி ஊரக பகுதிகளில் ஆக.9ல் மின்தடை!!

தூத்துக்குடி வாகைகுளம் துணைமின் நிலையத்தில் வருகிற 9ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகைகுளம் துணைமின் நிலையத்தில் 09.08.2025 அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால், காலை 09.00 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று தூத்துக்குடி ஊரகம் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம்

“விளாத்திகுளம் உபமின் நிலையத்தில் 09.08.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், விளாத்திகுளம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்”.

குளத்தூர்

“குளத்தூர் உபமின் நிலையத்தில் 09.08.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் குளத்தூர் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளுர் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

சூரங்குடி

“சூரங்குடி உபமின் நிலையத்தில் 09.08.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், சூரங்குடி உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts