தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்…

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம். 27.08.2025 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் இன்று (23.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

அதன்படி விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் (RDO) அல்லது சார் ஆட்சியரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்புதுறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்ட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும், வழக்கம்போல் ஒவ்வொரு சிலைகளுக்கும் 2 தன்னார்வலர்கள் நியமனம் செய்து, சுழற்சி முறையில் அந்தந்த சிலைகளுடன் 24 மணி நேரமும் இருக்க வேண்டும், சிலையின் உயரமானது 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. நிறுவப்படும் சிலைகள் தூய்மையான களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் (Plaster of Paris) போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களால் செய்யப்பட்டதாக இருக்க கூடாது. சிலை இருக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட வேண்டும். மேலும் சிலை அமைக்கும் இடங்கள் அருகே உள்ள குடியிருப்பு, கடை அல்லது வணிக வளாகம் ஆகியவற்றில் உள்ள சிசிடிவி கேமராவின் பார்வையில் இருக்கும்படி அமைக்க வேண்டும்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சிலைகளை கரைக்கும் இடத்திற்கு செல்ல சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் அனுமதிக்கப்பட்ட ஊர்வல பாதைகளில் மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும், விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது. மேலும் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக செய்தியாளர்

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts