
கோவில்பட்டியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழக ஆசிரியர் கூட்டணி கோவில்பட்டி வட்டாரக் கிளை, கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை மற்றும் PVT கைப்பந்து கழகம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் மினி மாரத்தான் போட்டியை கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.போட்டி தொடங்கும் முன்பு போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்தப் போட்டியில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாரிச்செல்வம் முதலிடத்தையும், வன்னி கோனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பார்த்தசாரதி இரண்டாவது இடத்தையும், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சக்திவேல் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் வழங்கினார்.மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் இல்லத்தார் நடுநிலைப்பள்ளி தலைவர் சங்கரன்,தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் கணேசன்,ஸ்ரீ பாலாஜி லேண்ட் ஸ்கேப்பிங் நிறுவன நிர்வாகி சதிஷ் (எ) அருண் தியாகராஜன்,தமிழக ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆசிரியர் ஜீவானந்தம்,மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி,வட்டாரச் செயலாளர் ஜெயக்குமார், வட்டார பொருளாளர் கண்ணன்,போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் (பொறுப்பு) பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.












