
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீபூவனநாத சுவாமி ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால்,தயிர்,சந்தனம்,இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்று நடந்தது.பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.












