
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள முத்து முடி முதல் பிரிவு பெரியசாமி மற்றும் மணி என்பவர் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு வழியே வந்த காட்டு யானை கூட்டம் ஒன்று நல்லிரவு இரண்டு மணி அளவில் புகுந்து விடியற்காலை 4 மணி வரை அப்பகுதி விட்டு செல்லவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்பு வனவிலங்கு அதிகாரிகள் வந்து அதை விரட்டிநார்கள். அவர்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜ்,டிவி உள்ளே இருக்கும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பின்புறமாக உள்ள கதவின் வழியாக அருகாமையில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அப்பகுதியில் யானைகள் அதிகளவு சுற்றி திரிகின்றன. உணவு கிடைக்காமல் இது போன்று வீடுகளை சேதப்படுத்தி வருகின்றனர்.
மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கம்பி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும், எந்த விலங்குகளும் வராமல் டைமன் கம்பி வேலிகளை அமைத்தால் எங்களுக்கு பாதுகாப்பு இருக்கும் ஏனெனில் இரவு நேரங்களில் யானைகள் மற்றும் சிறுத்தைகள் அதிகளவு நடமாட்டம் உள்ளது. இதனை கண்டு நிர்வாகங்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கண்டிப்பாக டைமண்ட் கம்பி வேலிகளை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பேபி.












