மயான எல்லை குறிப்பு!!

கோவில்பட்டி, நடராஜபுரம் கிழக்கு பகுதி 4 வது தெருவில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவசக்தி பத்திரகாளி அம்மன், ஸ்ரீ மலையாளத்து சுடலை மகாராஜா திருக்கோவில் 35-ம் ஆண்டு ஆடிக்கொடை விழா கொடை விழாவினை முன்னிட்டு இன்று அதிகாலையில் கும்பம் வளர்த்து மகா கணபதி ஹோமம், வேள்வி பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனை பூஜைகளுடன் திருவிழா ஆரம்பமானது.

மதியம் 12 மணியளவில் மகுடம் தட்டி சுவாமி மயான எல்லை குறிப்பும், உச்சிகால பூஜையும் நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள்,பக்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவில்பட்டி செய்தியாளர்,
-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts