மூணார் டவுனில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம்! – கண்டுகொள்ளுமா அரசு!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் ஆர்வோ ஜங்ஷன் பகுதியில் அமைந்திருக்கும் பழைய பாலம் உள்ளது. இது மாட்டுப்பட்டி மூணார் டவுன் மற்றும் அடிமாலி ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. முதிரப்புழா ஆறு குறுக்கே செல்லுவதால் இந்த பாலமானது ஆங்கிலேயர் இருந்த காலத்திலே உருவாக்கப்பட்டது.
இந்த பாலம் தற்பொழுதும் உபயோகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்ல அது சில ஆண்டுகளுக்கு முன்பாக வாகன நெரிசல் ஏற்பட்ட காரணத்தினால் புதிதாக ஒரு பாலமும் கட்டப்பட்டது. ஆனால் இப்பகுதி குறுகியதாக இருப்பதால் இரண்டு பாலமும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பழைய பாலத்தில் சாலையானது சிதிலமடைந்து காணப்படுகிறது. காலப்போக்கில் மழை அதிகரித்த நிலையில் அதனுடைய ஆழம் அதிகரித்ததால் அநேக வாகனங்கள் அதில் சிக்கி விபத்துக்குள்ளாவது வழக்கமாக உள்ளன மற்றும் இதை குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்த போதிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது மட்டுமல்லாது அந்த பழைய பாலம் அதனுடைய பலத்தின் தன்மை இவற்றை அறிந்து அதை உபயோகப்படுத்த பயன்படுத்தப்பட வேண்டுமா அல்லது புதிய பாலம் கட்டுவதற்கான முயற்சி ஏதாவது எடுக்கப்படுமா? என மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த பள்ளத்தை சரி செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts