
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு பகுதியில் மழைக்கால சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ரெயின் பார்ட்டி என்ற பெனால்டி சூட் போட்டி மூணாறு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிரீன் மூணார் சங்கத்தின் தலைமையில் இப்போ போட்டியானது நடத்தப்பட்டது. இதில் உடுமஞ்சோலை தாலுகா எம்எல்ஏ எம் எம் மணி அவர்களும் தேவிகுளம் தாலுகா எம் எல் ஏ வழக்குரைஞர் ராஜா அவர்களும் கலந்து கொண்டனர்.. போட்டியை எம் எல் ஏ எம் எம் மணி அவர்கள் தொடங்கி வைத்தார்.
பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர். போட்டியில் மூணார் நெல்சன் பாய்ஸ் அணி முதலிடமும், பீச் ஃபுட்பால் கோச் அவுட் இரண்டாவது இடமும் ஒர்க் ஷாப் ரெக்கிரியேஷன் கிளப் மூன்றாவது இடமும் மற்றும் மூணார் சிக்னேச்சர் நான்காவது இடத்தையும் பிடித்தனர். மூணாறு எம்எல்ஏ வழக்கறிஞர் ராஜா அவர்களும் மூணார் டி ஓ எஸ் பி அலெக்ஸ் அவர்களும் பரிசுகளை வழங்கினர். சிறந்த கோல் கீப்பர் விருது காட்வின் அவர்களும் சிறந்த ஷூட்டருக்கான விருது அஜித் குமாரும் பெற்றுக்கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணாறு.












