
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேற்று வனச்சரகர் தினம் கொண்டாடப்பட்டது இந்நிலையில்
இந்த சிறப்பு நாளில், இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. மா. வெற்றிவேல் அவர்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் முக்கியத்துவத்தையும், அந்த பகுதியில் பணியாற்றும் வனச்சரகர்களின் அர்ப்பணிப்பையும் மிகவும் மனமுவந்த வகையில் பாராட்டியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது; உலகில் உள்ள வனத்தில் பணியாற்றும் வனச்சரகர்களை போற்றும் தினமாக இன்று வனச்சரகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதில், கோவை மாவட்டம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வனச்சரகர்ககளை போற்றி வாழ்த்துகிறது இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
“வனச்சரகர் தினம்” இன்று கொண்டாடப்படுவது, வனங்களை பாதுகாக்கவும், காட்டு உயிரினங்களின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்தவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் வனத்துறை வீரர்களை நினைவுகூரும் அரிய தருணமாகும்.
“காட்டின் அமைதி காக்க, விலங்குகளின் உயிர் காப்பாற்ற, தங்களை இரவு பகல் பாராது தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ள வனச்சரகர்கள் – நம் இயற்கையின் உண்மையான காவலாளிகள். அவர்கள் இல்லையென்றால் யானை, புலிகள் இல்லை; யானை, புலிகள் இல்லையென்றால் காடு இல்லை. காடு இல்லையென்றால் மனித வாழ்வும் இல்லை!”
வனச்சரகர்களின் பணி என்பது எளிதல்ல. நீண்ட நேர காவல் பணி. பராமரிப்பு, பறவைகள் பாதுகாப்பு, மரங்களை பாதுகாப்பது,
வனகொலை, வனவிலங்கு – மனித மோதல் தடுப்பது, வனவிலங்கு வேட்டையினை தடுக்க வேண்டிய உழைப்பு – இவை அனைத்தும் அவர்களது நாளைய சவால்களாக இருக்கின்றன. இதையெல்லாம் சமாளிக்கும் அவர்கள், இயற்கையின் முதன்மை வீரர்கள்.
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பாக, இந்த நாள் “வனச்சரகர்களை கௌரவிக்கும் நாளாக” மட்டுமின்றி, வனத்தில் பணியாற்றும் அனைவரையும் பாராட்டுதலும் போற்றுதலும் மிகவும் முக்கியம். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வனப்பாதுகாப்பு மீதான விழிப்புணர்வை பெறும் நாளாகவும் மாற்ற வேண்டும்” என்ற அழைப்பு விடுக்கப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வுகள், வருங்காலத்தில் இன்னும் அதிகமாக இயற்கை நல்வழி இயக்கங்களை உருவாக்கும் என நம்புகிறேன் என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–M. சுரேஷ்குமார்.











