
விளாத்திகுளம்: 7.8.2025 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தற்காலிகமாக விநாயகர் சிலை வைத்தல் ஊர்வலம் செல்லுதல் மற்றும் விஜர்சனம் செய்தல் சம்பந்தமாக இந்து முன்னணி அகில பாரத இந்து மகா சபா இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் முன்னிலையில் இன்று நடத்தப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

(21.8.2025) ஆம் தேதி விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் படி நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார்
கடந்த 2024 ஆம் ஆண்டு விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இந்த ஆண்டிலும் விநாயகர் சிலை வைக்க அனுமதி உண்டு புதிய இடத்தில் தற்காலிகமாக விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை.
தற்காலிக விநாயகர் சிலை வைக்கும் பொறுப்பாளர்கள் அமைப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவம் ஒன்று பூர்த்தி செய்து வருவாய் கோட்டாட்சியர் அவரிடம் முறையாக முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
தற்காலிக விநாயகர் சிலை வைக்கும் போது விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தில் நில உரிமையாளர் இதர அதிகாரிகள் நெடுஞ்சாலை துறை பஞ்சாயத்து நகராட்சி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் ஆகியோரிடம் முறையாக தடை இன்மைசான்று பெற்று சமர்ப்பித்த பின்பு தற்காலிக விநாயகர் சிலை வைக்க வேண்டும்.
தற்காலிக விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் மின்சாரம் வழங்கும் ஆதாரத்தை குறிக்கும் கடிதம் மற்றும் தற்காலிகமாக மின்சாரம் இணைப்பு பெறுவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கொடுக்கப்பட்ட ஆவணத்தை சம்பந்தப்பட்ட நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்காலிக விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தில் ஒலிபெருக்கி முன் அனுமதியே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பெற்றிருக்க காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
தற்காலிக விநாயகர் சிலை கண்டிப்பாக 10 அடிக்கு உயர்த்திற்கு மிகாமல் சாலையில் எடுத்துச் செல்லும் அளவிற்கு அகலம் குறைவானதாகவும் இருக்க வேண்டும்.
மரவள்ளிக்கிழங்கு மற்றும் தேங்காய் நார் கழிவுகளால் ஆன விநாயகர் சிலை மட்டுமே வைக்கப்பட வேண்டும் ரசாயனம் நச்சுப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை அனுமதி கிடையாது.
தற்காலிக விநாயகர் சிலை வைக்கப்படும் இடம்மானது டின் சீட்டிலான மேற்கூறையே அமைக்கப்பட வேண்டும் கூரை செட்டுக்கு அனுமதி இல்லை.
விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது மேலும் தீயை அணைக்க கூடிய வாளிகளில் தண்ணீர் மற்றும் மணல் தயார் நிலையில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும்.
தற்காலிக விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் ஜெனரேட்டர் வசதி செய்திருக்க வேண்டும்.
தற்காலிக விநாயகர் சிலை வைக்கப்பட தினத்தில் இருந்து ஐந்து நாட்களுக்குள் எடுத்திருக்க வேண்டும்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட ஊர்வலப் பாதை வழியாகவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல வேண்டும் கடந்த 2024 ஆம் ஆண்டு போல் அல்லாமல் புதிய விநாயகர் ஊர்வல பாதைக்கு அனுமதி இல்லை.
அதேபோன்று கடந்த 2024 ஆம் ஆண்டில் யார் யாருக்கு எந்தெந்த நேரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டதோ அதேபோன்று குறித்த நேரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஆரம்பித்து குறித்த நேரத்திற்குள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முடித்திருக்க வேண்டும்.
விநாயகர் சிலை விஜர்சனம் செய்ய எடுத்துச் செல்லும்போது மாட்டு வண்டியிலையோ 3 சக்கர வாகனத்தில் எடுத்து செல்ல அனுமதி இல்லை மேலும் இனி லாரி மற்றும் டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.
தற்காலிக விநாயகர் சிலை விஜர்சனம் செய்ய எடுத்துச் செல்லும் வாகனத்தின் ஆவணங்கள் ஆர்.சி இன்சுரன்ஸ் எப்சி வாகன ஓட்டுனரின் ஓட்டுநர் உரிமை ஆகியவற்றை சமந்தப்பட்ட காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விநாயகர் சிலை எடுத்துச் செல்லும் வாகனத்தில் ஒலிபெருக்கி வைத்துக் கொள்ள அனுமதி இல்லை
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பிற மதத்தினர் மனது புண்படும்படியாக எந்த கோஷங்களையும் எழுப்பக் கூடாது பிற மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு பாண்டு வாத்தியங்கள் இசைக்கக் கூடாது.
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போதும் விஜர்னம் செய்ய எடுத்துச் செல்லும் போதும் கலந்து கொள்ளும் நபர்கள் மது அருந்துவதை தவித்து விட்டு கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு விநாயகர் சிலை எந்த வழியாக சென்று கரைக்கப்பட்டதோ இந்த வருடமும் அதே வழியாக சென்று விநாயகர் சிலை கரைத்து திரும்பி வர வேண்டும்.
விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம் ஊர்வலம் செல்லும் வழித்தடம் மற்றும் சில விஜர்சனம் செய்யப்படும் இடம் ஆகிய இடங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
தற்காலிக விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தில் விநாயகர் சிலை வைத்திருந்ததிலிருந்து எடுக்கும் வரை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சிலை பொறுப்பாளர்கள் இரண்டு பேர் இருக்க வேண்டும்.
மேற்படி பொறுப்பாளர்கள் யார் யார் என்றும் அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்கள் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தெரிவித்திருக்க வேண்டும்.
எனவே மேற்கண்ட அனைத்தையும் தவறாமல் கடைபிடித்து சிறப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் பேசினார் உடன் காவல் ஆய்வாளர் சக்திவேல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்களும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.












