விளாத்திகுளம் அருகே மண்டல பூஜை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஊசிமேசியாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீமுனியசாமி, ஸ்ரீ பொன்மாடசாமி, ஸ்ரீகருப்பசாமி,ஸ்ரீமகா துர்க்கை அம்மன், ஸ்ரீராமநாத சுவாமி, ஸ்ரீ பர்வனதினி அம்மன், திருக்கோவில் 48-ம் நாள் மண்டல பூஜை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சின்னமாட்டு வண்டி பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

சின்ன மாட்டுவண்டி பந்தயத்திற்கு போக வர 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு போட்டிக்கு போக வர 5 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts