
தூத்துக்குடி மாவட்டம் : 18.08.2025.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு வீரமரணமடைந்த காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அன்னாரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த 18.08.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் மணக்கரை அருகே ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணமடைந்தார்.
மேற்படி வீரமரணடைந்த காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (18.08.2025) ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் நேரில் சென்று அவரது திருஉருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவரை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நிரேஷ் உட்பட காவல்துறையினரும் அஞ்சலி செலுத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












