
கோவை: நமது இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 78 வருடம் முடிந்து 79வது வருடத்தில் அடியெடித்து வைக்க போகும் இந்த இனிய திருநாளில் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் நமது ஸ்டார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தினர் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம் அதன்படி இன்றும் நமது ஸ்டார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தினர் தனது ஸ்டார் புரமோட்டர்ஸ் குடும்ப உறவுகளுடன் இனிமையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஸ்டார் புரமோட்டர்ஸ் அலுவலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்ட கம்பீரமான கொடி மரத்தில் ஸ்டார் புரமோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் திரு. வெங்கடேஷ் சார் அவர்கள் நமது தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியை தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கி தேசிய கீதத்துடன் முடித்தனர் அவருடன் ஸ்டார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவினர், அலுவலக உதவியாளர்கள், விற்பனை மேலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.வெங்கடேஷ் அவர்கள் நமது இந்திய திருநாடு பொருளாதார அளவில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது என்றும் அது மென்மேலும் வளர்ந்து மூன்றாம் இடத்திற்கும் அதற்கு மேலும் செல்ல வேண்டும் என்று கூறினார் மேலும் அண்டை நாட்டுப் பொருட்களை வாங்காமல் நமது நாட்டில் தயாரிக்கும் பொருள்களையே வாங்கும் படியும் கூறினார் இதனால் நம் இந்திய பொருளாதாரம் மென்மேலும் வளர்ச்சி பெறும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் படிப்பு மற்றும் விளையாட்டு துறையில் சிறப்பிடம் பெற்ற குழந்தைகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் நம் இந்திய தேசியக்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.











