அதிக பாரங்களை ஏற்றி வரும் எஸ்டேட் வாகனங்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் எஸ்டேட் வாகனங்கள் அதிக அளவு பாரங்களை ஏற்றி வருவதினால் வால்பாறை வாகன ஓட்டுநர்கள்,பள்ளி குழந்தைகள்,சுற்றுலா பயணிகள்,பயந்த நிலையில் செல்லக்கூடிய அவல நிலை உருவாகி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது போன்ற அதிக பாரங்களை ஏத்தி வரும் வாகனங்களை போக்குவரத்து  அதிகாரிகள் கண்டும் காணாமல் செல்கின்றனர். காவல்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் முன்னே இது போன்ற வாகனங்கலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எப் சி, இன்சூரன்ஸ் டாக்ஸ் இல்லாமல் எஸ்டேட் வாகனங்கள் அதிகளவு ஓடுகின்றது. இந்த வாகனங்களில் ஆட்களை வால்பாறையில் இருந்து பிற எஸ்டேட்டுகளுக்கும் ஏற்றி செல்கின்றனர். வால்பாறை போக்குவரத்து அதிகாரிகள் இது போன்ற வாகனங்களை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வால்பாறையில் ஓடும் மினி லாரி ஓட்டுனர்களும்  பொதுமக்களும் கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts