
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா கப்பி குளத்தைச் சேர்ந்த கோ கன்னியம்மாள் என்பவர் ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கீரமங்கலம் கிராமம் புல எண்2/23 மேற்கண்ட முகவரியில் எனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன் மேலும் கதவு எண் 3/115 வீட்டு மனையானது 1994 ஆம் ஆண்டு அரசால் வீடு இல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டு அதன் பின்னர் காலனி வீட்டு திட்டத்தின் மூலம் கடந்த 2001 ஆம் ஆண்டு வீடு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
மேலும் எனது வீட்டிற்கு கீழ் புறமாக அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது அந்த இடத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த பெருமாள் சாமி த /பெ கணபதி மணிமுத்து த/பெ பெரிய காசி சம்பத் த/பெ அண்ணாதுரை அசோக் குமார் த/பெ பாலசிங்கம் கருப்பசாமி த/பெ சுந்தர்ராஜ் அழகு முருகேசன் த/பெ முனியாண்டி ஆகியோர்கள் இடத்தில் முள்வேலி அமைத்து எனது கீழ்புறம் சுவற்றிற்கும் கழிவறை மற்றும் சமையலறை மற்றும் படிக்கட்டுகள் அனைத்தையும் அடைத்து ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி போட்டுள்ளார்கள் 10 நாட்களுக்கு முன்னர் எனது தகப்பனார் இறந்த நாளுக்காக சமையல் செய்து உறவினர்களுக்கு கொடுப்பதற்காக 25 கிலோ காய்கறி மற்றும் அரிசி மற்றும் சமைத்த சாதம் அனைத்தையும் வீணாக்கும் விதமாக என்னையும் எனது கணவரையும் மேற்கண்ட நபர்கள் மிரட்டியும் சமையல் செய்ய விடாமல் கதவை அடைத்தும் மேலும் எனது வீட்டிற்கு செல்ல விடாமல் கம்பி வேலி அமைத்து முற்றிலும் அடைத்து விட்டார்கள் தற்போது நான் மற்றும் எனது கணவர் இருவரும் குத்தகை எடுத்துள்ள தோட்டத்தில் ஒரு குடிசையில் தங்கி இருக்கிறோம்.
மேலும் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அடைத்து எனது வீட்டிற்கு செல்ல முடியாமல் பாதை அனைத்தையும் அடைத்துவிட்டது சம்பந்தமாக கேட்டதற்கு முனியாண்டி மகள் அழகு முருகேசன் எனது கணவரையும் என்னையும் கம்பியால் குத்திக் கொன்று விடுவேன் என்றும் பெரியசாமி மகன் மணிமுத்து மண்வெட்டியை வைத்து வெட்டி கொன்று விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள் மணிமுத்துவும் அவர்கள் மனைவியும் எனது வீட்டு படிக்கட்டில் கழிவு தண்ணீர் மட்டும் குப்பைகளை கொட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள் ஆகையால் அய்யா அவர்கள் மேற்கண்ட நபர்கள் மீது அரசு புறம்போக்கு நிலத்தில் கம்பி வேலி அமைத்தும் எனது வீட்டின் படிக்கட்டு வழியாக வீட்டில் நுழைய விடாமல் போடப்பட்ட கம்பி வேலி அகற்றியும் எனது வீட்டிற்கு செல்வதற்கு பாதையை சரி செய்து தருமாறும் மேற்கண்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து எங்களைக் காப்பாற்ற கேட்டுக்கொள்கிறோம் என்று மாவட்ட ஆட்சியிடம் புகார் மனு அளித்துள்ளார்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












