இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரின் தியாகத்தை போற்றி வணங்குவோம் – மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் புகழாரம்!!

இம்மானுவேல் சேகரனாரின் 68 -ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.;

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தில் அமைந்துள்ள இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவ சிலைக்கு அவரது தியாகத்தை போற்றும் வகையில், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பிரியா குருராஜ் பேசுகையில்;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் ஆண்டுதோறும் இம்மானுவேல் சேகரன் இறந்த நாளான செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இம்மானுவேல் சேகரன், இந்திய ராணுவத்தில் பணியாற்றிப் பின்னர் தன் இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவராவார்.
1950-ல் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு வெகுண்டெழுந்தார். இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்று பின்னர்
இரட்டை குவளை முறைக்கு எதிராக மாநாடு,தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தினார் என்று கூறினார்.

இந்நிகழ்வில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாத்தையா, மகளிர் அணி பாலம்மாள், கனகம்மாள், கிளைச் செயலாளர்கள் சார்லஸ், தங்கராஜ், கிளை பிரதிநிதி சிவசுப்பிரமணியம், ஊர் நாட்டாமை மாரியப்பன், ராஜா புதுக்குடியைச் சேர்ந்த பால்ராஜ், சதீஷ்குமார் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts