
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணார் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பாக கேரளா சுற்றுலா வளர்ச்சி துறை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து இரண்டு அடுக்கு பேருந்து அறிமுகப்படுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பேருந்து பல எதிர்ப்புகளை தாண்டி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு சுற்றுலா பயணிகள் அனைவரையும் கவரும் வண்ணமாக வலம் வந்து கொண்டிருந்தது. மூணாறு சுற்றுலா தலமானது உயரமான மலை பிரதேசத்தை கொண்டுள்ளதால் சாலைகளில் இரண்டு அடுக்கு பேருந்தை இயக்குவது சிக்கலும் சிரமமும் ஏற்படும் எனவும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி பேருந்தை இயக்கக் கூடாது எனவும் பல தரப்பினர்களிடையே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் நடைமுறைக்கு வந்த சில மாதங்களில் பேருந்து சுற்றுலா பயணிகளின் உள்ளங்களை மகிழ்வித்து வந்தது. ஆனால் தற்பொழுது நேற்று எதிர்பாராத விதமாக தேவிகுளம் இரைச்சல் பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் நிழல்குடையை இடித்து விபத்துக்குள்ளானது இதனால் சுற்றுலா பயணிகள் இரண்டடுக்கு பேருந்தில் பயணம் செய்ய அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே சுற்றுலாத்துறையானது இரண்டு அடுக்கு பேருந்து பாதுகாப்பை உறுதி செய்து பின்னர் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்,
மூணாறு.












