இருந்தும் பயனில்லை – பலமுறை புகார்கள் தெரிவித்தும் பயனில்லை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகாவில் உள்ள வாட்டர் பால்,கவர்க்கல்,ஐயர் பாடி ஆகிய பகுதிகளில் பனிமூட்டங்கள் நிறைந்து காணப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதிகளில் வரும் அரசு பேருந்துகள்,சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் லாரி, கார் போன்ற இதர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் பனிமூட்டத்தால் வழி தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. அப்பகுதிகளில் சோலார் மின்விளக்குகள் இருந்தும் எரியாமல் இருக்கிறது. அவை எரிந்தால் விபத்துகள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்று மக்கள் கூறுகிறார்கள்.

அப்பகுதிகளில் உள்ள மரங்களின் ஒடிந்த வாதுகள் வாகனங்களில் உரசி ஓட்டுவதற்கு இடையூராக உள்ளது. முறிந்து அப்பகுதிகளில்  தொங்கிக் கொண்டு இருக்கிறது. இவைகள் உரசுவதால் வாகனங்களின் கண்ணாடிகள் உடைய வாய்ப்பு உள்ளது. இதை பலமுறை சாலை அமைப்பு அதிகாரிகளிடமும் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு சாலை அமைப்பு அதிகாரிகள் நவடிக்கை எடுப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts