ஈஷா யோகா மையத்தில் மாபெரும் வள்ளிக்கும்மி அரங்கேற்றம் – 2000 கலைஞர்கள் பங்கேற்பு!!

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் பாரம்பரிய கலைக் காவலர் பட்டம் பெற்ற ஆசிரியர் திரு. சிவக்குமார் அவர்களின் காராள வம்சம் கலைச்சங்கம் சார்பாக மாபெரும் வள்ளிக்கும்மி அரங்கேற்றப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விழாவில், 2000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு, பாரம்பரியமிக்க வள்ளிக்கும்மி நடனத்தை அரங்கேற்றினர். சற்குரு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடல்களுக்கு ஏற்றவாறு கலைஞர்கள் ஒத்திசைந்து ஆடிய நடனம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

பெரும் திரளான பார்வையாளர்கள் கலந்துகொண்டு அரங்கேற்று விழாவைக் கண்டு ரசித்தனர். பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக நடைபெற்ற இந்த நிகழ்வு கலை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கொங்கு நித்தியனந்தம்,மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்

-𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts