கடந்த 2021ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தீர்ப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் : 19.09.2025

திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு – இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 24 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா(28/25) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கணம் நீதிபதி திரு. முருகன் அவர்கள் இன்று (19.09.2025) குற்றவாளி இசக்கிராஜா என்பவருக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 5000/- அபராதம் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இந்திரா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி.எல்லம்மாள் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. லிங்ககனி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 24 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts