கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பிரச்சாரம்!!

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக்கூடிய எட்டாவது புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பிரச்சாரம் கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவில் கலை இலக்கியம், அறிவியல், பண்பாடு, ஆன்மீகம், சமூகவியல், விடுதலைப் போராட்ட வீரர்கள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கும். மாலை நேர நிகழ்வாக பள்ளி குழந்தைகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சாளர்கள் கருத்துரைகளும் நடைபெறுகிறது. காலை நிகழ்வாக மந்திரமா? தந்திரமா அறிவியல் இயக்க செயல்பாடுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களுக்கு, பத்திரிகைகள் வழங்கி புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.. புத்தகத் திருவிழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் ஆர்வலர்கள், சமூக அலுவலர்கள், கல்வியாளர்கள், பட்டதாரிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர், தலைமை ஆசிரியர்கள் சரவணன், சின்ன ராஜா பாரதிதாசன், நூலகர் வனிதா அருள்மாரி மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் செந்தில்நாதன், சிறப்பாசிரியர்கள் அறிவழகன், ராதா, ராணி, பிரியா, ரம்யா கணக்காளர்கள் ராஜேஸ்வரி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts