கல்லார் பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் அருகே அமைந்திருக்கும் கொச்சின் மற்றும் தனுஷ்கோடி இடையேயான தேசிய நெடுஞ்சாலை 85 கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லை வழி போக்குவரத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். மட்டுமல்லாது சுற்றுலா தளங்களுக்கு விமானம் மூலமாக வந்து செல்லும் பயணிகளுக்கு மூணார் முதல் கொச்சின் விமான நிலையம் வரை இணைக்கப் பட்டிருக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையானது பல்வேறு பாலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதில் மிகவும் முக்கியமான ஒரு பாலம் கல்லார் பாலம். இப்பாலம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் அரசு எதனையும் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. தற்பொழுது அதில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ஆங்காங்கே குழிகள் கிடப்பதாலும் வாகனங்கள் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.

இதனால் பல விபத்துகளும் ஏற்படுகின்றன. பலமுறை அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தும் இதுவரை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மிகப்பெரிய விபத்தினை தடுத்திட அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக அப்பாலத்தை சீரமைத்து விபத்து இல்லாத பயணத்தை ஏற்படுத்த வேண்டும் என மீண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன் மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts