
அவசரம் மின்னஞ்சல் கடித எண் 124/ 2K25
நாள்:20/09/2025
அனுப்புதல் சுவாமிமலை விமல் நாதன் செயலர் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் 24 54 தெற்கு வீதி சுவாமிமலை 612 302
அலைபேசி எண் : 63 800 91 465
மின்னஞ்சல் [email protected]
பெறுதல்
திரு .நரேந்திர மோடி மாண்புமிகு பிரதமர் புது டெல்லி
திரு சிவராஜ் சிங் சவுகான் மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் புது டெல்லி
திரு பியூஸ் கோயல் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் புது டெல்லி
திருமு.க. ஸ்டாலின் மாண்புமிகு முதலமைச்சர்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திரு முருகானந்தம் தலைமைச் செயலர்
திரு சத்ய பிரதா சாகு செயலர் உணவுத்துறை
திரு தக்ஷிணாமூர்த்தி செயலர் வேளாண் உற்பத்தி ஆணையர்
திரு உமாநாத் முதல்வரின் முதன்மை செயலர்
திரு எம் எஸ் சண்முகம் முதல்வரின் செயலர்
திரு ஜான் ஃபிலிப்ஸ் மேலாண் இயக்குனர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம்
வழி திருமதி பிரியங்கா பங்கஜம் தஞ்சாவூர்
திருமதி ஹிருத்யா விஜயன்
சார் ஆட்சியர் கும்பகோணம்.
பசுமை வணக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் வடகிழக்கு பருவமழையும் வழக்கத்திற்கு மாறாக கூடுதலான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய அரசின் வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் துல்லியமாக கணித்து அறிவிப்பு தந்துள்ளது போல் வழக்கத்தை விட அதிகளவு மழை பொழிவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் காவிரி சமவெளி மாவட்டங்களில் முன்பட்ட குறுவை அறுவடை துவங்கியுள்ள நிலையில் மழை பெய்து கொண்டிருப்பதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையில் நனைந்து வருகின்றன.
இதனால் நெல் மணிகளில் கொள்முதல் செய்வதற்கான வழக்கமான ஈரப்பதம் 17 சதவீதத்தை விட இயற்கையாகவே கூடுதலாக இருக்கின்றது.
அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை உலர்த்துவதற்கு
ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 எண்ணிக்கைக்கு குறைவில்லாத நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தும் மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று நெல் கொள்முதல் நிலையங்களில் மட்டுமே நெல் உலர்த்தும இயந்திரங்களின்வசதிகள் மத்திய அரசின் இந்திய உணவு கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு சமீபத்திய கோடை நெல் சாகுபடி அறுவடை நேரத்தில் கூட திடீரென இரண்டு நாட்கள் பெய்த பருவம் தவறிய மழையில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையினால் நனைந்து பெருத்த பொருளாதார இழப்பினை விவசாயிகளுக்கு ஏற்பட்டதை மத்திய மாநில அரசுகளுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறோம்.
இந்த நிலையில் தற்போது காவிரி சமவெளி மாவட்டங்களில் திடீர் திடீரென அதிகரித்து பெய்து வரும் இயற்கையான மழையினால் வயல்களில் உள்ள நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும் அவ்வாறு அறுவடை செய்த நெற்பயிர்கள் மடையில் நனைந்து ஈரப்பத்தின் அளவு இயற்கையாகவே அதிகரிப்பதால் தமிழ்நாடு அரசு இந்திய அரசிற்கு உடனடியாக அவசர மின்னஞ்சல் கடிதம் அனுப்பி தற்பொழுது உள்ள சூழ்நிலையில் நெல்லில் ஈரப்பதம் 25 சதவீதம் இருந்தாலும் அவற்றினை எக்காரணம் கொண்டும் தர வெட்டு தர கட்டுப்பாடு மற்றும் விலை குறைப்பு என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல்லினை கொள்முதல் செய்வதற்கான மத்திய அரசின் சிறப்பு அனுமதி ஆணையினை உடனடியாக வழங்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். அதனை இந்திய அரசும் எக்காரணம் கொண்டும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஏற்று இந்திய உணவு அமைச்சகமும் மற்றும் இந்திய உணவுக் கழகமும ஈர நெல் கொள்முதல் குறித்த அரசாணையினை நிரந்தர அரசாணையாக அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் உடனடியாக வெளியிட வேண்டும்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் புவி வெப்பமடைதல் மேக வெடிப்பு பருவம் தவறிய மழை உள்ளிட்ட இவ்வாறான அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவது இயல்பாகி விட்டதால் இவ்வாறான காரிப் மற்றும் ரபி பருவங்களில் அறுவடை காலங்களில் நெல் மற்றும் கோதுமை அறுவடை நேரங்களில் பொழுது நெல் மற்றும் கோதுமை கொள்முதலின் பொழுது அனைத்து மாநில உழவர்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் அரசாணையை நிரந்தர அரசாணையாக வெளியிட வேண்டுமென மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென மத்திய அரசு எதிர்பார்க்காமல் நாட்டில் உள்ள அனைத்து உழவர்கள் சார்பில் வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
எனவே இத்தகைய தளர்வு அனைத்து அறுவடை பருவங்களிலும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய நிரந்தர சிறப்பு அரசாணையாக உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் இந்திய பிரதமரையும் தமிழ்நாட்டு முதலமைச்சரையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் இந்திய அரசின் உணவுக் கழகத்தின் மூலமோ மத்திய அரசின்நபார்டு வங்கியின் நிதி உதவியோடு அனைத்து நெல் மற்றும் கோதுமை கொள்முதல் நிலையங்களிலும் நிரந்தர நெல் கோதுமை தானியங்கள் உலர்த்தும் இயந்திரங்கள் கட்டமைப்பு வசதிகள் நிரந்தரமாக அமைக்கப்பட வேண்டும்.
மிக்க நன்றி
சுவாமிமலை விமல் நாதன் செயலர் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம்)*
அலைபேசி எண்
63800 91465
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாலமுருகன் தஞ்சாவூர்.












