
கடுமையான தண்டனைக்கு பிறகும் தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை வ.உ.சி. எதிர்த்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகரற்ற சுதந்திர போராட்ட வீரர், எங்கள் பெரும்பாட்டன் வ.உ.சிதம்பரனாரின் 154வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி சைவ வேளாளர் சங்கத்தில் உள்ள வ.உ.சி. அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் முனைவர். சம்பத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்;
செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை – பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 02.09.1872ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்விப் படிப்பை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியை திருச்சியிலும் பயின்று 1894 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார். மேலும், சமூக சேவையிலும், அரசியல் பணியிலும் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் வ.உ.சி.
தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார் என்று கூறினார்.
உடன் சிலை பராமரிப்புக் குழுவின் நிர்வாகி தனியார் கல்லூரி முதல்வர் முனைவர். பிரபு கூறுகையில்;
1. வ.உ.சிதம்பரனாருக்கு நாடாளுமன்றத்தில் வெண்கலச் சிலையமைக்க வேண்டும், மற்றும்
2. வ.உ.சி பிறந்த நாளை தேசிய வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் வ.உ.சி குடும்பத்தார்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளித்து, குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.












