
கோவில்பட்டியில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. 27 அணிகள் பங்கேற்று விளையாடின.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பங்கேற்று போட்டியினை துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து நடந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில்,14 வயதிற்குட்பட்ட போட்டியில் முதல் இடம் தூத்துக்குடி தஸ்நேவிஸ் பள்ளியும்,
இரண்டாம் இடம் நாலூமாவடி காமராஜ் பள்ளியும்,
மூன்றாம் இடம் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் வெற்றி பெற்றனர்.
17 வயதிற்குட்பட்ட போட்டியில் முதல் இடம் தூத்துக்குடி தஸ்நேவிஸ் பள்ளியும்,
இரண்டாம் இடம் நாலூமாவடி காமராஜ் பள்ளியும்,
மூன்றாம் இடம் கோவில்பட்டி நகராட்சி பள்ளியும்
வெற்றி பெற்றனர்.
19 வயதிற்குட்பட்ட போட்டியில்
முதல் இடம் கோவில்பட்டி
LSV மெட்ரிக் பள்ளியும்,
இரண்டாம் இடம் தூத்துக்குடி
தஸ்நேவிஸ் பள்ளியும், மூன்றாம் இடம் தூத்துக்குடி VVD பள்ளியும் தட்டிச் சென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு
திமுக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினார். சிறந்த ரைடர், கேச்சர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் தலைமை வகித்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாத்தையா உடனிருந்தார்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜார்ஜ் பால்ராஜ், பொருளாளர் மெர்வின் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், கண்ணன், முனைவர் கரிகாலன், காளிராஜ், சுடலை, முனைவர் லட்சுமணப் பெருமாள் ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
போட்டியின் முடிவில் உடற்கல்வி ஆசிரியர்கள் திமுக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
இதில் மாணவ, மாணவிகள் மற்றும் கபடி ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












