கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செவிலியர் உதவியாளர் மீது தாக்குதல் நடத்திய ஒப்பந்த பணி பாதுகாவலர்!!

மது போதையில் காவல் நிலையத்திலும் ஒப்பந்த பணி பாதுகாவலர் அலப்பறையைக் கூட்டியதால் பரபரப்பு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

6 மாத காலமாக தொந்தரவு கொடுத்ததாகவும், வெளியே சொன்னால் தனது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக செவிலியர் உதவியாளர் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்மணி ஒருவர் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதே மருத்துவமனையில் கோவில்பட்டி தாமஸ் நகரை சேர்ந்த ஒப்பந்த காவலாளியாக விநாயக முத்து என்பவரும் பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை இரவு அந்த பெண்மணி வழக்கம்போல பணிகளை முடித்துவிட்டு அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கிளம்பி உள்ளார். அவரைப் பின்தொடர்ந்து வந்த விநாயக முத்து அந்த பெண்மணியை மறித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி தாக்கியுள்ளார். மேலும் அவரது கணவர், குழந்தை ஆகியோரையும் கொலை செய்து விடுவதாகவும் விநாயக முத்து மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண்மணி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல் நிலையத்திற்கு விநாயக முத்துவை போலீசார் அழைத்து வந்தபோது மது போதையில் காவல் நிலையத்திலும் போலீசார் மற்றும் வெளியே நின்றவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts