கோவில்பட்டி பேச்சாளருக்கு ரோட்டரி சங்கத்தின் புதுமைப் பெண் விருது!!

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் சௌபாக்யா மகாலில் நடைபெற்ற ரோட்டரியின் குடும்ப விழாவில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கோவில்பட்டி அன்ன பாரதிக்கு பாரதி கண்ட புதுமைப்பெண் விருது வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார். இதில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி கலந்து கொண்டு இல்லறம் இனிக்கட்டும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கோவில்பட்டி அன்ன பாரதிக்கு ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் ரோட்டரியின் புதுமைப் பெண் விருது வழங்கி பாராட்டி பேசினார்.

இதில் ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், நாராயணசாமி, பாபு, முத்துச்செல்வன், ஆசியாபார்ம்ஸ் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்கத் துணைத் தலைவர் முத்து முருகன் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts