கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவருக்கு பாராட்டு விழா வாக்கு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் துவக்கம்…

கோவை மதுக்கரை சாலையில் உள்ள செங்கப்பக்கோனார் திருமண மண்டபத்தில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. என்.கே. பகவதி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சிறப்பாக வழிநடத்தியதற்காக இந்தப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.


மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. காளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி (மேற்கு) தலைவர் திரு. முருகநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம்.என். கந்தசாமி, கோவை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி மாமன்ற குழுத் தலைவரும், மாநில துணைத் தலைவருமான திரு. அழகு ஜெயபால், மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வைத் தொடர்ந்து வாக்கு திருட்டைக் கண்டித்து குறிச்சி பகுதியில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்கள், சார்பு அணி தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, திரு. என்.கே. பகவதிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கையெழுத்து இயக்கத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

உங்கள் செய்தியாளர்
M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts