சட்டமன்ற உறுதி மொழி குழு ஆய்வு தூத்துக்குடியில் நடந்தது!!

ரூ.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா எந்த நோக்கத்திற்காக கட்டப்படுகிறதோ அதன் நோக்கம் 3 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும். இதன் மூலம் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலை ஏற்படும். மேலும், திருக்கோயில்கள், மசூதிகள், பள்ளிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக இருக்க்க்கூடிய இடங்களில் கூடுதலாக மதுக்கடைகள் திறக்கக்கூடாது என சட்டமன்ற பேரவையில் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மனமகிழ் மன்றம், திருகோவில் வளாகங்களுக்குட்பட்ட பகுதிகளில் புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டால், மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பேசி அதற்கு அனுமதி அளிக்காமல், மறுபரிசீலனை செய்து அதற்கான உரிய வழிகாட்டுதல்களை இக்குழு வழங்கும். மேலும், பக்தர்களுக்கு தேவையான சுகாதார வசதிகளாக தற்பொழுது 41 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக கழிவறைகள் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எதிர்காலத்தில் பயோ மெட்ரிக் முறையில் நடமாடும் கழிவறைகள் வைப்பதற்கு இக்குழு பரிந்துரை செய்யும். இலட்சகணக்கான பக்தர்கள் வருகை புரிகின்ற திருச்செந்தூர் நகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கும், கூடுதலாக நிதி வசதியுடன் முறைப்படுத்துவதற்குமான நடவடிக்கையை அரசு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இக்குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என தி.வேல்முருகன் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் தருவை மைதானம் அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகம் மற்றும் தீயணைப்பு கருவிகளை பார்வையிட்டார். பின்னர் திருச்செந்தூர் சாலை மீளவிட்டான் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட Tidel Neo (தொழில்நுட்ப பூங்கா) மற்றும் அதில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனத்தையும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பகுதியில் கடல் உள்வாங்கியுள்ள இடத்தையும், திருக்கோவில் பாடசாலை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குழு துணைச் செயலாளர் ஸ்ரீ.ரா.ரவி, சார்பு செயலாளர் த.பியூலஜா உள்ளிட்ட அரசு துறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts