வால்பாறை வாட்டர் பால் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சாலைகளைச் சுத்தம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்!
கோவை மாவட்டம் வால்பாறை வாட்டர் பால் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துக்குமார் தலைமையில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் தேசிய பசுமைப் படை (NSS) ஆகியவை இணைந்து ஒரு விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பள்ளிக்கு அருகிலும் வால்பாறை – பொள்ளாச்சி பிரதான சாலையில் வாட்டர் பால் பகுதிக்கு உட்பட்ட இடங்களிலும் இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம்
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் மாணவர்கள் சாலைகளின் இருபுறங்களிலும் இருந்த குப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், இதர பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை பொறுக்கி எடுத்து அப்பகுதியைச் சுத்தம் செய்தனர்.
இப்பள்ளியின் ஆசிரியப் பெருமக்களாகிய வீரப்பன், கணபதி சுப்பிரமணியம், விசாலாட்சி, தேவி மற்றும் திரளான மாணவர்கள் இந்தச் செயல்பாட்டில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். மாணவர்கள் சாலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மைப்படுத்தியதைக் கண்ட அப்பகுதிப் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து, அவர்களுக்குப் பெரும் வரவேற்பை அளித்தனர்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர் தெரிவிக்கையில் மாணவச் செல்வங்கள் கஷ்டப்பட்டு இந்தத் தூய்மைப் பணியைச் செய்கிறார்கள் ஆனால் ஆழியார் செக் போஸ்டில் இருக்கும் வனத்துறை அலுவலர்கள் வால்பாறைப் பகுதிக்கு வரும் பொதுமக்களிடம், பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைச் சாலை ஓரங்களில் போடக் கூடாது என்று தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி குப்பைகளைப் போடுபவர்கள் மீது கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் வனத்துறை அதிகாரிகள் ஆழியார் செக்போஸ்ட் பகுதியில் உரிய விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாமும் இதன் மூலம் கோரிக்கை விடுக்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-P.பரமசிவம்.













