
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அடிப்படை வசதிகள் இன்றி கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) நிர்வாகி வால்பாறை P.பரமசிவம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரடியாக மனு அளித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அடிப்படைத் தேவைகளிலும் பற்றாக்குறை கழிவறை வசதி நகராட்சி பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த பொதுக் கழிப்பிட வசதி பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு தினந்தோறும் வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
மின்விளக்கு ஈமச்சடங்கு சிக்கல் இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்துள்ளது இதனால் இறந்தவர்களின் உடலை இரவு நேரங்களில் அடக்கம் செய்யும்போது செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் சடங்குகளை வெளிச்சமின்றி சிரமத்துடன் செய்ய வேண்டியுள்ளது.
இந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டி வால்பாறை P.பரமசிவம் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து அப்பாவி மக்கள் படும் கஷ்டங்களை எடுத்துரைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் இக்கோரிக்கைகளை உடனடியாகச் சரிசெய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
மக்கள் படும் இன்னல்களை நீக்கி சோலையார் அணைப் பகுதியில் அடிப்படை வசதிகளை மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.












