
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வால்பாறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் வேன் கவிழ்ந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறையை சுற்றிப் பார்த்து விட்டு ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் ஆழியார் பகுதியில் குரங்கருவி அருகாமையில் டூரிஸ்ட் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. வாகனத்தில் வந்த பயணிகள் மற்றும் டிரைவர் லேசான காயத்துடன் தப்பினர். காயமடைந்தவர்களை அவ்வழியே வந்த அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் இதர வாகன ஓட்டுனர்கள் 108 வாகனத்தை வரவழைத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தை ஆழியார் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.












