தஞ்சாவூரில் உலக சுற்றுலா தினம்!!


இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப அவர்கள் வழிகாட்டுதலின் படி தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

முதலில் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வருகை புரிந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு திருவையாறு அரசு இசை கல்லூரி மாணவர்களின் மங்கல இசையுடன் பாரம்பரிய முறைப்படி சந்தனம் குங்குமம் இட்டு, இனிப்பு வழங்கி, பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி உதவியுடன் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பான் செக்கர்ஸ் மகளிர் கலை கல்லூரியில் சுற்றுலா கருத்தரங்கம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாலையில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் வண்ண கோல போட்டி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் வரலாற்று அறிஞர் திரு. அய்யம்பேட்டை செல்வராஜ் வழிகாட்டுதலில் பாரம்பரிய நடை பயணம் மற்றும் மாதுளான் புதுக்கோட்டை அம்பேத்குமார் குழுவினரின் தப்பாட்டம் கரகாட்டம் காளை ஆட்டம் மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு. சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் செய்தியாளர்,

S. பாலமுருகன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts