தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வால்பாறை கிளைப் பேரவைக் கூட்டம்!!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம்!!

கோவை மாவட்டம் வால்பாறை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (TNGEA) வால்பாறை வட்டக் கிளையின் 16-வது பேரவைக் கூட்டம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சங்கத்தின் செயலாளர் வைரவேல் வரவேற்புரையாற்றினார். மூத்த நிர்வாகி நடராஜ் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புரையாற்றிய ஜெகநாதன், அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்தும் அவற்றை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி புதிய ஓய்வூதியத் திட்டத்தை (CPS) கைவிட வேண்டும்.
சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியத்தை முறைப்படுத்துதல் மற்றும் இடமாறுதல் வழங்குதல்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 31.07.2021 அன்று முதலமைச்சர் அறிவித்த சம்பளத் தொகையான ரூபாய் 425.40 ஐ தற்போதைய பஞ்சப்படியுடன் சேர்த்துச் சுமார் ரூபாய் 570 ஆக வழங்க வேண்டும்.
படகு இல்லத்தை உடனடியாகச் சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.
சாலைப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள 41 மாதச் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலைச் சிற்றுண்டியைச் சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்குப் பாதுகாப்பையும் அடிப்படை வசதிகளையும் பணி நிரந்தரத்தையும் வழங்க வேண்டும்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சங்கத்தின் வால்பாறை வட்டக் கிளையின் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் விவரம்
தலைவர் அபி ரகுமான் வருவாய்த்துறை,
செயலாளர் ச. கோபாலகிருஷ்ணன் நெடுஞ்சாலைத் துறை,
துணைத் தலைவர்கள் K. வைரவேல் அரசு ஐ.டி.ஐ,
M. செந்தில் குமார் நெடுஞ்சாலைத் துறை
S. சகுந்தலா சத்துணவு
இணைச் செயலாளர்கள் பிரேமா (VHN)
R. வளர்மதி சத்துணவு,
P. குமார் நெடுஞ்சாலைத் துறை,
செயற்குழு உறுப்பினர்கள் R. மணி நெடுஞ்சாலைத் துறை,
சிவராஜ்
இறுதியில் புதிய துணைத் தலைவர்களில் ஒருவரான செந்தில்குமார் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர்
-P.பரமசிவம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts