தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் போட்டி!!

தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் தூத்துக்குடி மண்டல ஹாக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, மாவட்ட அணி மற்றும் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி பங்கு பெற்றுள்ளன. நேற்று காலை நடைபெற்ற துவக்க விழாவில் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா மற்றும் தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் போட்டியை துவக்கி வைத்தனர். போட்டியின் ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். உடன் நிர்வாக குழு உறுப்பினர் சாமி ராஜன் தலைமை ஆசிரியர் அண்ணாமலை மற்றும் நாடார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், ராம்குமார், வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முதல் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி 3-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி எம்.என் அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சிவகங்கை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணி 8-0 கோல் கணக்கில் தென்காசி ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 3-1 கோல் கணக்கில் திருநெல்வேலி எம்.என் அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி 6-0 என்ற கோல் கணக்கில் கன்னியாகுமரி கார்மல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை எஸ்.பி.கே மேல்நிலைப்பள்ளி சிவகங்கை புனித ஜோசப் பள்ளி விளையாடிய போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அஸ்வின், முன்னாள் தேசிய வீரர் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோர் ஒருங்கிணைந்த அணி தேர்வு குழு உறுப்பினர்களாக செயல்படுகின்றனர் நடுவர் மேலாளரா காளிதாஸ், நடுவர்களாக கார்த்திக் ராஜா, மதன்குமார், சதீஷ்குமார், சேவியர், அழகுராஜா, ராம் கார்த்தி, சிவானந்த, ஆகியோர் செயல்படுகின்றனர். இப் போட்டியில் முதலிடம் பெறும் அணி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறும். மேலும் சிறப்பாக விளையாடும் வீரர்களை தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஹாக்கி அணி தேர்வு பெற்று மாநில போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். துவக்க விழாவில் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி உறுப்பினர்கள் சுரேஷ்குமார், முருகன் , கிருஷ்ணமூர்த்தி, மனோஜ் குமார், தனசேகரன், மாயாண்டி, அன்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts